Friday, May 16, 2008

வணக்கம் பா !

அல்லா பசங்களுக்கு வணக்கம் !. .. தே.. கம்முனு கிட !. இங்க பெருசு பெசினு கீது ல்லை .. ஹீ ஹீ .. சாரி பா .. நான் இன்னா சொல்ல வரேன்னா.. எனக்கோ சினிமா பார்க்கறது தான் full time பொழப்புன்னு ஆயி போச்சு.. பொறவு இன்னா ? நான் பார்க்கற அல்லா படத்தை பத்தியும் இங்கெ எழுதுவேனாம்.. பொழப்பு கெட்ட நீங்களும் படிப்பீங்கலாம் .. உருப்படாத தேறாத தறுதலை படம் முதல், உட்டா லக்கடி கிரி கிரி படம் வரை அல்லாத்தையும் காசு குடுத்து பார்க்கற காரணத்தால .. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையைகம் !. அப்படின்னு நாங்களும் கிளம்பிட்டோம் ல..